உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் மிஸ்பா உல் ஹக் தலைமையில் களமிறங்கும்

உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் மிஸ்பா உல் ஹக் தலைமையில் களமிறங்கும்

உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் மிஸ்பா உல் ஹக் தலைமையில் களமிறங்கும்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 5:50 pm

உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை மிஸ்பா உல் ஹக் தலைமை தாங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதனிடையே உபாதைக்கு உள்ளாகியுள்ள மிஸ்பா உல் ஹக் அதிலிருந்து மீள்வதற்கு கடுமையாக உழைத்துவருவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலக கிண்ணப் தொடரின் போது அணியை வழிநடத்த மிஸ்பா உல் ஹக் தயாராக இருப்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது உபாதைக்கு உள்ளான மிஸ்பா உல் ஹக்  தொடரில் இருந்து வெளியேறியிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்