அஸாமில் ஆயுததாரிகள் தாக்குதல்; 50ற்கும் மேற்பட்டோர் பலி

அஸாமில் ஆயுததாரிகள் தாக்குதல்; 50ற்கும் மேற்பட்டோர் பலி

அஸாமில் ஆயுததாரிகள் தாக்குதல்; 50ற்கும் மேற்பட்டோர் பலி

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 2:53 pm

இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 50ற்கும் அதிமானோர் உயிரிழந்துள்ளனர்.

பின்தங்கிய கிராமமொன்றில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறார்களே அதிகம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பதற்றம் அதிகரித்துள்ள சோனித்பூர் மற்றும் கோக்ரஜார் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தினால் கிராம மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளனார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்