அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2014 | 5:44 pm

2014 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் மதன் மோகன் மலாவியா ஆகியயோருக்கு வழங்கப்படவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் 90ஆவது பிறந்த தினம் மற்றும் மலாவியாவின் 153 ஆவது ஜனன தினம் ஆகியன அண்மித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என நீண்டகாலமாக பாரதீய ஜனதாக் கட்சி வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்து பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும் சுதந்திரப் பேராட்ட வீரருமான மதன் மோகன் மாலாவியாவிற்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

இந்தியாவின் உயரிய பாரத ரத்னா விருது, இதுவரை 43 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருதுகள், விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்