ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர விளக்கமறியலில்

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர விளக்கமறியலில்

ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 6:55 pm

வீதி நாடக நிகழ்வொன்றின் போது, ஹம்பாந்தோட்டை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் ரவீந்திர எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர், அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

நகர மேயரும், அவரது ஆதரவாளர்களும் தம்மீதும், நாடக குழுவொன்றின் மீதும்  தாக்குதல் நடத்தியதாக  ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்