வெட்கம் இருந்திருந்தால் பதவி விலகிவிட்டு சென்றிருக்க வேண்டும்; ஜனாதிபதி இரத்தினபுரியில் உரை (Video)

வெட்கம் இருந்திருந்தால் பதவி விலகிவிட்டு சென்றிருக்க வேண்டும்; ஜனாதிபதி இரத்தினபுரியில் உரை (Video)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 9:21 pm

அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் தொடர்பாக இன்று இரத்தினபுரியில்   இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவித்தார்.

[quote]முஸ்லிம் மக்களை சுட்டிக்காட்டி அவர்கள் தம்முடைய மக்கள் என சிலர் கூறுகின்றனர். ஆகவே கொடுக்கல் வாங்கள் ஒன்றை செய்வோமா என கேட்கின்றனர். ஆனால் தலைவர்களின் தேவைக்கு ஏற்ப அந்த முஸ்லிம் மக்கள் பணத்திற்காக விலை போகமாட்டார்கள் என நாங்கள் கூறுகின்றோம். தலைவர்கள் வருவதாகவும் செல்வதாகவும் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கின்றனர்.  ஆனால் ஒரு தலைவர் கூட வரவில்லை. இன்று தான் இரண்டு பேர் சென்றுள்ளனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பெற்றுக் கொண்டு ஒருவர் இன்று சென்றுள்ளார். வெட்கம் இருந்திருந்தால் அந்த பதவியில் இருந்து விலகிவிட்டு சென்றிருக்க வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்