மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் (Video)

மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் (Video)

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 2:54 pm

கணக்கியல் தொடர்பான தேசிய உயர்நிலை டிப்ளோமா பாடத்திட்டத்தின் தரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மாணவர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கை மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் நுழைவதற்கு முயற்சித்தபோதே, கண்ணீ்ர்ப் புகைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், கொழும்பு – கோட்டையில் இருந்து பேரணியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அருகிற்கு வருகைத்தந்திருந்தனர்.

அங்கு கூடிய மாணவர்கள் உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது, 04 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், பின்னர் கைதான மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

எவ்வாறாயினும், அமைதியற்ற முறையில் செயற்பட்ட மாணவர்களை கலைப்பதற்கு நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்திய போதிலும், எவரையும் கைதுசெய்யவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்