தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 9:28 am

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து  67 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக   பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதில்  ஆறு துப்பாக்கிப் பிரயோக  சம்பவங்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோஹண தெரிவித்தார். வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடைய சுமார் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவர்களில்  பிரதேச சபை தலைவர்கள் நான்குபேரும், பிரதேசசபை உறுப்பினர்கள் ஆறுபேரும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இரவு நேரங்களில் இடம்பெறும் பிரசார கூட்டங்களின் போது அதிகளவு வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

இதன் காரணமாக இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வன்முறையில்   ஈடுபடுபவர்களை கைதுசெய்யவுள்ளதாக  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலுன் தொடர்புடைய 350 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்துக்கு கிடைத்துள்ளன


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்