திருகோணமலையில் ஆற்றில் மூழ்கி ஒருவரை காணவில்லை

திருகோணமலையில் ஆற்றில் மூழ்கி ஒருவரை காணவில்லை

திருகோணமலையில் ஆற்றில் மூழ்கி ஒருவரை காணவில்லை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 1:45 pm

திருகோணமலை குச்சவெளி சலப்பையாறு ஆற்றில் மூழ்கி ஒருவர் காணாமற்போயுள்ளார்.

சலப்பையாறு பகுதியை சேர்ந்த 29 குறித்த நபர் இன்று காலை 5.30 அளவில் ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றபோதே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போனவரை தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, மூதூர் சம்பூர் கடற்பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டு்ளார்.

குறித்த சடலம் பூனைத்தீவு பகுதியில் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சம்பூர் கடற்பகுதியில் நேற்றுமுந்தினம் மாலை மூன்று பேருடன் குறித்த படகு கவிழ்ந்திருந்தது.

அதிலிருந்த இருவர் நீந்தி கரை திரும்பியதை அடுத்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்