ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 9:31 am

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் சுமார் எண்ணாயிரத்து 500 தபால் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முன்னெடுப்பதற்கு தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு காரணத்தினால் வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் வரை தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, தபால் வாக்குச் சீட்டு விநியோகமும் 97 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்