சம்மாந்துறையில் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிளில்  வெடிபொருட்கள்

சம்மாந்துறையில் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள்

சம்மாந்துறையில் இலக்கத் தகடு இன்றி பயணித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 4:53 pm

சம்மாந்துறை நிந்தவூர் பகுதியில் ரீ-56 ரக துப்பாக்கி உள்ளிட்ட சில  வெடிபொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகித்திற்கிடமான வகையில் அக்கரைப்பற்றிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த இலக்கத் தகடு அற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை இன்று சோதனைக்கு உட்படுத்த பொலிஸார் முயன்றபோது அதிலிருந்தவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

நிந்தவூர் மாட்டுப்பொல பாலத்துக்கருகில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பை ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

04 மெகசீன்களும் அதற்கான 373 ரவகைளும், எஸ்.எல்.ஆர் ரக மெகசீன் ஒன்றும் அதற்கான 17 ரவைகளும் குறித்த பையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்