”சபரிமலை யாத்திரை”யினை புனித யாத்திரையாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம்

”சபரிமலை யாத்திரை”யினை புனித யாத்திரையாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 9:47 pm

சபரிமலை ஶ்ரீ ஐயப்ப சுவாமி பக்தர்களின் வருடாந்த விரத யாத்திரையினை புனித யாத்திரையாக அங்கீகரித்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரதியமைச்சர் பிரபா கணேசனிடம், ஐயப்பா சுவாமி பக்தர்கள் தமது சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அங்கீகரிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோளை முன்வைக்குமாறு கோரியிருந்தனர்.

அதற்கமைய, ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஸ சபரிமலை யாத்திரையினை புனித யாத்திரையாக அங்கீகரித்துள்ளதாக புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்