கட்சி பேதமின்றி பாப்பரசரை வரவேற்க ​வேண்டும் – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

கட்சி பேதமின்றி பாப்பரசரை வரவேற்க ​வேண்டும் – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 10:33 pm

கட்சி பேதமின்றி பரிசுத்த பாப்பரசரை வரவேற்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

[quote]உலகத்திற்கு ஒரு பாப்பரசரே உள்ளார். அதிகமானோர் இல்லை. அவரை இலங்கைகக்கு அழைக்க விருப்பம் பெற்றோம். யன்னலின் ஊடாக முகத்தை காண்பிப்பதற்கு முன்னதாகவே நாங்கள் விருப்பத்தைப் பெற்றோம். அவர் தெரிவானதன் பின்னர் அந்த தேவாலயத்தின் யன்னல் ஊடாக மக்களுக்கு உரையாற்றினார். அதற்கு முன்னரே இலங்கைக்கு வருமாறு நான் அழைத்தேன். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் நான் அந்த அழைப்பை விடுத்தேன். அதன் போது அவர் இணக்கம் தெரிவித்தார். எனவே அவரின் விஜயத்தை தேர்தலுக்காக இல்லாதொழித்துக்கொள்ள வேண்டிய தேவை கிடையாது. ஆசியாவில் உள்ள சிறிய நாடு இது. பாப்பரசர் ஒருவர் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்தமை எமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகும். ஆகவே நாம் அவரை வரவேற்கத் தயாராக வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பாப்பரசரை வரவேற்க வேண்டும். வெற்றி பெறுபவர்களும் தோல்வியடைபவர்களும் நாமும் ஒன்றிணைந்து வரவேற்பளிக்க வேண்டும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்