இலங்கை, இந்திய மீனவர்கள் 58 பேர் விடுதலை

இலங்கை, இந்திய மீனவர்கள் 58 பேர் விடுதலை

இலங்கை, இந்திய மீனவர்கள் 58 பேர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2014 | 6:51 pm

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களில் 28 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில்  திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

மேலும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்தினூடாக அறிவிப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய மீனவர்கள் நாளை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், விடுதலை செய்யப்படுவார்கள் என நடராஜா கணேசமூர்த்தி கூறியுள்ளார்.

இதனிடையே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள 28 இந்திய மீனவர்களையும் யாழ். இந்திய துணைத் தூதரகம் பொறுப்பேற்றுள்ளது.

இவர்களை நாளை அல்லது நாளை மறுதினம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தமிழக சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 30 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் நாளை நாட்டை வந்தடைவார்கள் என யாழ். இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்