வௌ்ளத்தால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு

வௌ்ளத்தால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு

வௌ்ளத்தால் வடக்கு ரயில் சேவை பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 1:51 pm

அதிக மழையின் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

தலாவ பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த நகர்சேர் கடுகதி ரயிலை, ஷிராவஸ்திபுர பகுதியில் நிறுத்த நேரிட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிடுகின்றது.

திருகோணமலை மார்க்கத்தின் கல்லோயா, கந்தளாய் பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கமும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் ரயில், பளுகஸ்வெவ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்