வாக்காளர் அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படும் – தே.தி

வாக்காளர் அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படும் – தே.தி

வாக்காளர் அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படும் – தே.தி

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 10:41 am

ஜனாதிபதித் தேர்லுக்காகன வாக்காளர் அட்டைகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் இந்த பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.

ஒருகோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகளை இன்றைய தினம் தபாலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் பின்னர் தபால் திணைக்களத்தினால் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறுகின்றார்.

வாக்காளர் அட்டைகள் மாவட்ட தபால் அலுவலகங்களுக்கு கிடைத்த பின்னர், அவற்றை உரியவாறு வகைப்படுத்தும் நடவடிக்கைகள் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, அன்றைய தினமும் வாக்காளர் அட்டைகளை வீடூவீடாக விநியோகிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்