மட்டக்களப்பு, திருகோணமலையிலும் கடும் மழை

மட்டக்களப்பு, திருகோணமலையிலும் கடும் மழை

மட்டக்களப்பு, திருகோணமலையிலும் கடும் மழை

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 10:51 am

மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அதிக மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது,

மட்டக்களப்பில் நேற்றிரவு முதல் பெய்துவரும் அடை மழையின் காரணமாக காத்தான்குடி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதிக மழையின் காரணமாக திருகோணமலை – மூதூர், கட்டைப்பறிச்சான் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில், மதுரங்குளி பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்