பாகிஸ்தானில் இரு தாக்குதல்தாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் இரு தாக்குதல்தாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் இரு தாக்குதல்தாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 2:47 pm

பாகிஸ்தானின் பெஷாவர் பாடசாலையொன்றில் நடத்தப்பட்ட  தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் ஏற்கனவே வேறு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்ட இரண்டு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக  பாகிஸ்தானில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை பெஷாவரில் நடைபெற்ற தாக்குதலில் 141 பேர் கொல்லப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின்  தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தானின் இராணுவ தளபதியால் கோரப்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமைகம் மீது தாக்குதல் நடத்திய அகீல் எனப்படும் உஸ்மான், 2003ஆம் ஆண்டு பர்வேஸ் முஷரப் மீது தாக்குதல் நடத்திய அர்ஷத் மொஹமட் ஆகியோர் நேற்று பைசலாபாத் சிறையில் இரவு 9 மணியளவில் தூக்கிலிடப்பட்டனர்.

பிரதமர் நவாஸ் ஷெரிப் அனுமதி வழங்கியதை அடுத்து, ஆறு பேருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் அறுவரில் இருவருக்கு நேற்றிரவு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்