நுவரெலிய, கண்டி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நுவரெலிய, கண்டி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நுவரெலிய, கண்டி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 1:59 pm

மாத்தளை, கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மாவட்டங்களின் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் வீதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்