தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 10 பிரதேச அரசியல்வாதிகள் கைது

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 10 பிரதேச அரசியல்வாதிகள் கைது

தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 10 பிரதேச அரசியல்வாதிகள் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 10:46 am

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேச சபைத் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என இதுவரை பத்து பிரதேச அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து இதுவரை பொலிஸாருக்கு 54 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் இதுவரை 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகள், பதாதைகள் மற்றும் கட்டவுட்களை அகற்றும் நடவடிக்கைகள் 95 வீதம் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரை சட்டவிரோத தேர்தல் பிரசாரங்களை அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்