தேர்தல் முறைப்பாடுகள் 280ஆக அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகள் 280ஆக அதிகரிப்பு

தேர்தல் முறைப்பாடுகள் 280ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 10:31 am

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது.

இவற்றுள் பாரதூரமான 29 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்கும் பிரிவு தெரிவிக்கின்றது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான 39 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

அரச சொத்துகளின் பயன்பாடு தொடர்பில் 20 முறைப்பாடுகளும், அரச ஊழியர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் குறித்து 40 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்