சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிடுகிறது சொனி பிக்சர்ஸ்

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிடுகிறது சொனி பிக்சர்ஸ்

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிடுகிறது சொனி பிக்சர்ஸ்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 4:03 pm

சர்ச்சைக்குள்ளான இன்டர்வியூ திரைப்படத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக சொனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தி இன்டர்வியூ எனும் திரைப்படம் வட கொரியத் தலைவர் படுகொலை முயற்சியை நகைச்சுவையாக விவரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நத்தார் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 25ஆம் திகதி 1,000 திரையரங்குகளில் வெளியிடுவதற்கு சொனி பிக்சர்ஸ் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த படத்தை வெளியிடும் பட்சத்தில் திரையரங்குகளின் கணனி ஒருங்கிணைப்பை சீர்குலைத்து விடுவதாக கணனி ஊடுறுவலில் ஈடுபடுபவர்கள் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கையை மீறி  திரைப்படம் வெளியானால், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் போன்ற சம்பவம் நிகழும் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சொனி பிக்சர்ஸ் நிறுவனம், உடனடியாக வெளியீட்டை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

எனினும் நத்தார் தினத்தன்று திரைப்படம் வெளியிடப்படமாட்டது என்ற போதிலும் பிறிதொரு நாளில் படம் வெளிவரும் என தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்