சட்டவிரோத தேர்தல் பிரசார சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றும் நடவடிக்கை 95 வீதம் வெற்றி – பொலிஸ்

சட்டவிரோத தேர்தல் பிரசார சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றும் நடவடிக்கை 95 வீதம் வெற்றி – பொலிஸ்

சட்டவிரோத தேர்தல் பிரசார சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றும் நடவடிக்கை 95 வீதம் வெற்றி – பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 2:07 pm

சட்டவிரோத தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத சுவரொட்டிகள், பெனர்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் நடவடிக்கை 95 வீதம் வெற்றியளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிறைவுபெறும் வரையில் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒருசில பகுதிகளில் தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் காணப்படுவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதென அவர்  கூறியுள்ளார்.

அவற்றை அகற்றுவதற்கு தவறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்