குவிச்சன்குளத்திள் அணை உடைப்பெடுக்கும் அபாயம்; அண்மித்த பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை

குவிச்சன்குளத்திள் அணை உடைப்பெடுக்கும் அபாயம்; அண்மித்த பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை

குவிச்சன்குளத்திள் அணை உடைப்பெடுக்கும் அபாயம்; அண்மித்த பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2014 | 10:16 am

அநுராதபுரம் குவிச்சன்குளத்தின் அணை உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளதால், குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் நகர ஆணையாளர் சம்பத் ரோஹண தெரிவிக்கின்றார்.

நிலவுகின்ற அதிக மழையின் காரணமாக குளம் ஏற்கனவே வான் பாய்வதாக நகர ஆணையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதன் காரணமாக குளத்திற்கு அருகில் வடிகாண் அமைத்து நீரை வெளியேற்றுவதற்கும், அங்கிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடம் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நகர ஆணையாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்