விஜய் படத்தில் நான் இளவரசி:  ஹன்சிகா

விஜய் படத்தில் நான் இளவரசி: ஹன்சிகா

விஜய் படத்தில் நான் இளவரசி: ஹன்சிகா

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2014 | 3:37 pm

இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அடுத்த ஆண்டில் தங்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்று திரையுலக நட்சத்திரங்கள் தற்போதே கணக்குப்போட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால், நடிகை ஹன்சிகாவை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டு சிறந்த ஆண்டாகத்தான் இருக்கப் போகிறது. காரணம், அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளன.

[quote]நான் மிகவும் எதிர்பார்க்கும் ‘வாலு ‘ எனக்கு மிக பொருத்தமான படமாகும். மிகவும் துடிப்பான வலிமையான பாத்திரம். இதற்கெல்லாம் மேலே விஜய்யுடன், சிம்பு தேவன் இயக்கதில் நடிக்கும் பிரம்மாண்டமான படைப்பு. இந்த படத்தில் நான் இளவரசியாக நடிக்கிறேன். படப்பிடிப்பில் நான் இளவரசியாக தான் உணர்கிறேன். சிலர் எனக்கு அதிர்ஷ்டம் என்கின்றனர். கடின உழைப்புடன் விடா முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். என்ன நடந்தாலும், நான் என் கடமையில் கண்ணாக இருப்பேன்[/quote]

என்றார் ஹன்சிகா.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்