மட்டக்களப்பில் உயிருடன் கரையொதுங்கிய டொல்பின்

மட்டக்களப்பில் உயிருடன் கரையொதுங்கிய டொல்பின்

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2014 | 3:06 pm

மட்டக்களப்பு – சந்திவெளி, பாலையடித்தோணா பிரதேச கடற்பகுதியில் உயிருடன் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

சுமார் 5 அடி நீளமான டொல்பின் நேற்று கரையொதுங்கியுள்ளது.

சிறிது நேரத்தின் பின்னர் மீனவர்கள் டொல்பினை கடலுக்குள் விட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

கரையொதுங்கிய டொல்பினின் உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதுடன், கடலில் நீந்த முடியாது தத்தளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்