புத்தளம் மன்னார் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

புத்தளம் மன்னார் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

புத்தளம் மன்னார் வீதியூடான போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2014 | 2:06 pm

நிலவுகின்ற சீரற்ற வானிலையினால் புத்தளம்-மன்னார் வீதியின் எழுவன்குளம் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதன் காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுள்ளார்.

குறிப்பாக எழுவன்குளம் பகுதியில் இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக மழையினால் தப்போவ, இங்கினிமிட்டிய மற்றும் தெதுருஓயா நீர்த் தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர பராக்ரம சமுத்திரத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்