இந்த நாட்டில் சட்டம் காணப்படுகின்றதா, என கேள்வி எழுப்புகின்றார் மைத்திரிபால

இந்த நாட்டில் சட்டம் காணப்படுகின்றதா, என கேள்வி எழுப்புகின்றார் மைத்திரிபால

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2014 | 3:16 pm

பொது எதிர்க்கட்சிகளின் கூட்டமொன்று எல்பிடிய நகரில் நேற்று (17) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன  தெரிவித்ததாவது;

[quote]இந்த நாட்டின் அனைத்துப் பிரிவுகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நாட்டின் ஒழுக்கத்தை சீர்குலைத்தனர். இந்த நாட்டின் தாய்மார்கள், பெண்களின் கௌரவத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில், இந்த அரசாங்கத்தைப் போன்று எந்தவொரு அரசாங்கமும் செயற்படவில்லை. சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் துஷ்பிரயோகம் போன்றன அதிகளவில் எந்தவொரு காலப்பகுதியிலும் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், மாகாண சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் எவ்வளவு அழிவை ஏற்படுத்தினார்கள்? அவற்றுக்கு தண்டனை இல்லை. இந்த நாட்டில் சட்டம் காணப்படுகின்றதா?[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்