ஆப்கான் வங்கியில் தலிபான் தற்கொலைதாரிகள் தாக்குதல்: 10 ​பேர் கொலை

ஆப்கான் வங்கியில் தலிபான் தற்கொலைதாரிகள் தாக்குதல்: 10 ​பேர் கொலை

ஆப்கான் வங்கியில் தலிபான் தற்கொலைதாரிகள் தாக்குதல்: 10 ​பேர் கொலை

எழுத்தாளர் Bella Dalima

18 Dec, 2014 | 3:50 pm

ஆப்கானிஸ்தானில், வங்கியொன்றில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 3 ​பொலிஸார் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத் தலைநகர், லஷ்கர் கா நகரிலுள்ள நியூ காபூல் வங்கிக்கிளைக்கு ஐந்து தற்கொலைப் படை பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.

பின்னர், வங்கியின் வாயிற்பகுதியில் ஒரு பயங்கரவாதி தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்து ஏனைய பயங்கரவாதிகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து நான்கு பயங்கரவாதிகளும் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 3 பொலிஸார் உட்பட 10 பேர் உயிரிழந்ததாகவும், 6 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 15 பேர் காயமடைந்ததாகவும் ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்