ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளிய ரஹ்மான்

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளிய ரஹ்மான்

ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளிய ரஹ்மான்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 5:41 pm

ஆங்கில நாளிதழான ”போர்ப்ஸ்” ஆண்டு தோறும் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டும் இந்தியாவின் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், முதலிடத்தை இந்தி நடிகர் சல்மான் கான் பெற்றுள்ளார். அமிதாப்பச்சன், ஷாருக்கான், தோனி, அக்ஷய்குமார், விராட் கோஹ்லி, அமீர்கான், தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் முதல் பத்து இடங்களை பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் தென்னிந்தியாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 13ஆவது இடத்தையும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 39ஆவது இடத்தையும், நடிகர் விஜய் 41ஆவது இடத்தையும், ரஜினிகாந்த் 45ஆவது இடத்தையும், அஜித்குமார் 51ஆவது இடத்தையும், தனுஷ் 78ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 30ஆவது இடத்தையும், பவன் கல்யாண் 74ஆவது இடத்தையும், அல்லு அர்ஜூன் 80ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்