மைத்திரி நிர்வாகத்தினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரவி கருணாநாயக்க

மைத்திரி நிர்வாகத்தினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரவி கருணாநாயக்க

மைத்திரி நிர்வாகத்தினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ரவி கருணாநாயக்க

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 7:41 pm

குரோத அரசியலுக்குப் பதிலாக மைத்திரி நிர்வாகத்தினை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கின்றார்.

கொட்டாஞ்சேனையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

[quote]குரோத அரசியலை ஒருபுறம் தள்ளிவிட்டு மைத்திரி நிர்வாகம் ஒன்றுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. எமது நாட்டின் பொருளாதாரம், சீர்குலைந்துள்ள நிலையில், நல்லாட்சி இல்லாமல் போயுள்ள நிலையில் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காகவே ஹெல உறுமய, மக்கள் விடுதலை முன்னணி, சரத் பொன்சேக்கா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தமிழ் முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.  நீண்ட நாள் செல்ல முன்னர் அது தெரிய வரும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்