மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீறவில்லை; ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 7:35 pm

பிளவுபடாத நாட்டிற்குள் அனைத்து இனங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்வதற்குள்ள உரிமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு உள்ள உரிமையை தற்போதைய அரசாங்கம் ஒரு நாளும் பறித்தெடுக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கண்டி அக்குரனை பகுதியில் நடைபெற்ற மக்கள் சிந்திப்பின்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டில் மதவாதத்தையும், இனவாதத்தையும் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்குவதற்கு ஒருசிலர் முயற்சிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

போலி பிரசாரங்களுக்கு ஏமாறாமல் வெற்றிகொண்ட சமாதானத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் மீறவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதற்கு ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தீர்மானமிக்க ஜனாதிபதி தேர்தலே நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, பொறுப்புமிக்க ஒருவரிடமே நாட்டை கையளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சிலர் கொள்கைகாக அன்றி அரசியல் பழிவாங்களை நோக்கமாக கொண்டே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தகைய நபர்கள் மீது நம்பிக்கை கொள்ளமுடியாது எனவும், எதிர்கால சந்ததியினரின் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்