நிறைவேற்றதிகார முறையின் பாதகங்கள் குறித்து அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னரே சிலருக்கு புலப்படுகிறது

நிறைவேற்றதிகார முறையின் பாதகங்கள் குறித்து அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னரே சிலருக்கு புலப்படுகிறது

நிறைவேற்றதிகார முறையின் பாதகங்கள் குறித்து அரசாங்கத்தில் இருந்து விலகிய பின்னரே சிலருக்கு புலப்படுகிறது

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 2:07 pm

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பாதகங்கள் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்து அரசாங்கத்திலிருந்து விலகியதன் பின்னரே சிலருக்கு புலப்படத் தொடங்கியுள்ளதாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ​தெரிவித்தார்.

மாத்தளை நாவுல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

போலியான குற்றச்சாட்டுக்கள் ஊடாக நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல முடியாது என  ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

[quote]பிளவுபட்ட நாட்டின் ஐக்கியதுவத்தை பாதுகாக்குமாறு 2005ஆம் ஆண்டில் எனக்குக் கூறப்பட்டது. செய்வதை கூறும் ஜனாதிபதி என்ற வகையில் அதனை நான் செய்து முடித்தேன். ஆயுத வியாபாரமும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது ஆயுதங்களை விற்பனை செய்யமுடியவில்லை. தரகுப்பணமும் கிடையாது. அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் நான் மக்கள் மத்தியில் வந்தேன். மீண்டும் நாட்டை அபிவிருத்து செய்வதற்கான ஆனையைக் கேட்டேன் என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரத்தை எனக்கு வழங்கினீர்கள். குறுகிய காலத்திற்குள் நான் வீதிகளை சீரமைத்தேன். மக்களின் கருத்தை கேட்கவேண்டும். நாம் ஒரு வேலையைச் செய்தால் அது தவறா? சரியா? எனக்கேட்க வேண்டும். தற்போது மீண்டும் மக்களின் முன் வந்துள்ளோம். நாட்டில் ஒழுக்கமான சமூகத்தை ஸ்தாபிக்கவே உங்களிடம் இம்முறை ஆனையைக்ககோருகின்றேன். இந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் உலகை வெற்றிகொள்ளக்கூடிய நாட்டை உருவாக்குவது எனது அடுத்து நடவடிக்கையாகும். அதற்காகவே உங்கள் முன் வந்துள்ளேன். [/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்