சீனாவிலிருந்து 800 பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

சீனாவிலிருந்து 800 பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

சீனாவிலிருந்து 800 பஸ்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 5:13 pm

சீனாவிலிருந்து மேலும் 800பஸ்கள் இந்த மாத இறுதியில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கிராமிய போக்குவரத்து சேவைகள் மற்றும் நகரங்களுக்கிடையிலான சேவைகளுக்காக இந்த பஸ்களை பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை போக்குவரத்து சபையின் பிரதித் தலைவர் எல்.ஏ.விமலரத்ன கூறியுள்ளார்.

சீனாவில் கொள்வனவு செய்யப்பட்ட 2,200 பஸ்களில் இதுவரை 1,600 பஸ்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதில் பெரும்பாலான பஸ்கள் ஏற்கனவே இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக எல்.ஏ.விமலரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்