சின்னக் கரைச்சியில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சின்னக் கரைச்சியில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

சின்னக் கரைச்சியில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 4:11 pm

திருகோணமலை குச்சவெளி சின்னக் கரைச்சியில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உப்பளம் அமைக்கப்படுமானால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குச்சவெளி பெரிய கரைச்சி பகுதியில் ஏற்கனவே உப்பளம் ஒன்று அமைக்கப்பட்டு பிரதேச மக்களின் கடள்வளம் சூறையாடப்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில்  திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, சின்னக் கரைச்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள உப்பளம் தொடர்பில் இதுவரையில் பிரதேச செயலாளரால் தனக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி :


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்