சாவகச்சேரி பிரதேசத்தில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

சாவகச்சேரி பிரதேசத்தில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

சாவகச்சேரி பிரதேசத்தில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 5:28 pm

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள கிணற்றில் இருந்து சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

8 வயதான சிறுவனின் சடலமே இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சாவகச்சேரி கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்ற இச்சிறுவன் தன் சிறிய தாயாருடனே வசித்து வந்தமை தெரியவந்துள்ளது.

சடலம் மீட்கப்பட்ட இடத்தில்  சாவகச்சேரி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்