ஊழல்மிகு ஆட்சி ஜனவரி 8ஆம் திகதி முடிவுக்கு வரும் – மைத்திரிபால சிறிசேன

ஊழல்மிகு ஆட்சி ஜனவரி 8ஆம் திகதி முடிவுக்கு வரும் – மைத்திரிபால சிறிசேன

ஊழல்மிகு ஆட்சி ஜனவரி 8ஆம் திகதி முடிவுக்கு வரும் – மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 8:07 pm

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி பணிகளை தரமான முறையில் எதிர்காலத்தில் முன்னெடுப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

குருநாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற அரசியல் அலையின் ஊடாக ஊழல்மிகு அரசாங்கத்தின் ஆட்சி ஜனவரி 8ஆம் திகதி முடிவுக்கு வரும் என மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பொது எதிரணியினரால் உருவாக்கப்படவுள்ள  புதிய அரசாங்கத்தின் ஊடாக இராணுவ வீரர்களுக்கு உண்மையான கௌரவம் வழங்கப்படும் எனவும் இதன்போது அவர் உறுதியளித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்