உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறு இரு வாரங்களுக்குள் வெளியாகும் – ப.தி

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 7:55 pm

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பெறுபேறுகளை பட்டியலிடும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர் தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 197 பாடசாலை பரீட்சார்த்திகளும், 62 ஆயிரத்து 134 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.

இதேவேளை, நடைபெற்று வருகின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு இடம்பெற்றதாக இதுவரை எவ்வித தகவலும் பதிவாகவில்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்