அரச அதிகாரிகளை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

அரச அதிகாரிகளை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

அரச அதிகாரிகளை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 3:35 pm

அரச அதிகாரிகள் மற்றும் அரச வளங்களை தேர்தல் கடமைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில், 55 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் தெரிவிக்கின்றது.

கிடைத்துள்ள முறைப்பாடுகளில், அரச வளங்களை பயன்படுத்தியமை தொடர்பில் 10 முறைப்பாடுகளும், அரச அதிகாரிகளை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை  தொடர்பில் 17 முறைப்பாடுகளும் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அரச அதிகாரிகளுக்கு முறையற்ற விதத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டமை தொடர்பிலும் 27 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளுக்கு அமைய  08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்