அதுருகிரிய விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ரஷ்ய குழு இலங்கைக்கு விஜயம்

அதுருகிரிய விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ரஷ்ய குழு இலங்கைக்கு விஜயம்

அதுருகிரிய விமான விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ரஷ்ய குழு இலங்கைக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

14 Dec, 2014 | 4:01 pm

அத்துருகிரிய ஹோகந்தர பகுதியில் விமானப் படைக்கு சொந்தமான விமானமொன்று உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பான விசாரணைகளுக்கு ரஷ்யாவின் நிபுணர் குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது

விபத்துக்குள்ளான விமானத்தில் கடைசியாக திருத்த வேளைகளை முன்னெடுத்த நிறுவனத்தின் நிபுணர் குழுவே இன்று வரவுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செனவிரத்ன தெரிவிக்கின்றார்.

அவர்களால் முன்னெடுக்கவுள்ள விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகவும்  விமானப்படை பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

இதனிடையே, உடைந்து விழுந்த விமானத்தின் பாகங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

விமான விபத்தின் போது சேதமடைந்த வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் கிஹான் செனவிரத்ன கூறியுள்ளார்.

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அண்டனோவ் விமானம் கடந்த 12 ஆம் திகதிஉடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் விமானி உட்பட 04 விமானப்படை உறுப்பினர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு விமானப்படை உறுப்பினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்