விபத்துக்குள்ளான விமானத்தின் தலைமை விமானியின் இறுதி வாக்குமூலம்

விபத்துக்குள்ளான விமானத்தின் தலைமை விமானியின் இறுதி வாக்குமூலம்

விபத்துக்குள்ளான விமானத்தின் தலைமை விமானியின் இறுதி வாக்குமூலம்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 2:13 pm

பனி மூட்டம் காரணமாக தாம் பயணிக்கும் பிரதேசம் தெளிவற்று காணப்படுவதாக இறுதியாக கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்ட தலைமை விமானி வசந்த அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

விமானப்படைத்தளபதி கொமான்டர் கிகான் செனவிரத்னவே இன்று காலை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். இந்த உரையாடல் காலை 6.16 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மேலும் விபத்தின் போது ஐவர் விமானத்தில் பயணித்ததாக தெரிவித்தார். இவர்களில் நால்வர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். அவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு (ஆங்கிலத்தில்)

Squadron Leader J.M.W.N. Abeywardena
Flight Lft. A.A.D.T. Amaratunge
Flight Sgt. M.W.L. Priyantha
Copral W.W.A.N. Wijeyaratne

விமானம் கட்டுநாயக்காவிலிருந்து இரத்மலானை விமான நிலையம் நோக்கி பயணித்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்