ரஜினியை ட்விட்டரில் வாழ்த்திய மோடி

ரஜினியை ட்விட்டரில் வாழ்த்திய மோடி

ரஜினியை ட்விட்டரில் வாழ்த்திய மோடி

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 1:15 pm

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் நள்ளிரவு முதலே அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை துவங்கி தூள் கிளப்பி வருகின்றனர். இன்று அவர் நடித்துள்ள லிங்கா படமும் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஜி ஜாம்பவான் ரஜினிகாந்த்ஜிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நலமாக இருந்து நீண்ட காலம் வாழ வேண்டும் என்று மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னை வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.

ரஜினிக்கும், மோடிக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. அதனால் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்று அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.

wish to rajini

யார் அழைத்தாலும் சரி இழுத்தாலும் சரி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக இல்லை. இருப்பினும் கட்சியினரும் தங்கள் முயற்சியை கைவிடுவதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்