அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மாலை

அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மாலை

அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று மாலை

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2014 | 11:39 am

அனைத்து தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு. அமரதாஸ தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெறுகின்ற இந்த கலந்துரையாடலில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதாக யு அமரதாஸ குறிப்பிட்டார்.

பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக மேலதிக ​தேர்தல்கள் ஆணையாளர் யு அமரதாஸ கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்