யாழ்ப்பாணத்திற்கு லொறியில் பயணித்த இளைஞனின் கொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கு லொறியில் பயணித்த இளைஞனின் கொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கு லொறியில் பயணித்த இளைஞனின் கொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 1:45 pm

யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்றபோது, காணாமற்போன லொறியில் பயணித்த முல்லைத்தீவு இளைஞனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ். திருநெல்வேலி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு உணவுப்பொருட்கள் ஏற்றிச்சென்ற லொறியொன்று கடந்த 30 ஆம் திகதி காணாமற்போயிருந்தது

45 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் பயணித்த லொறியுடனான தொடர்பு புத்தளம் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் யாழ். கோப்பாய் மற்றும் கொழும்பு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் லொறியின் நடத்துனர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், லொறியில் இருந்த பொருட்களை சாரதியுடன் இணைந்து விற்றமை மற்றும் லொறிக்கு பொறுப்பாக அனுப்பப்பட்ட இளைஞன் கொலைசெய்யப்பட்டு காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டமை ஆகிய விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதனையடுத்து, மல்லாவி – வவுனிக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞனின் சடலம் அனுராதபுரம் – புத்தளம் இடையிலான காட்டுப்பகுதியில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்