நீர்கொழும்பில் பரவிய தீயினால் மூன்று வீடுகளுக்கு சேதம்

நீர்கொழும்பில் பரவிய தீயினால் மூன்று வீடுகளுக்கு சேதம்

நீர்கொழும்பில் பரவிய தீயினால் மூன்று வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 10:00 am

நீர்கொழும்பு பகுதியில் பரவிய தீயினால் 03 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30 அளவில் பரவிய தீயினால் 02 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீடொன்றில் மண்ணெண்ணை விளக்கு சரிந்து விழுந்ததில், தீ பரவியுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்துச் சேதங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்