சரியாக வரி செலுத்துபவர்களுக்கு பதக்கங்கள் வழங்க இறைவரித் திணைக்களம் தீர்மானம்

சரியாக வரி செலுத்துபவர்களுக்கு பதக்கங்கள் வழங்க இறைவரித் திணைக்களம் தீர்மானம்

சரியாக வரி செலுத்துபவர்களுக்கு பதக்கங்கள் வழங்க இறைவரித் திணைக்களம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 9:29 am

உரிய நேரத்தில், சரியாக வரி செலுத்துபவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்குவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், இந்த மாதம் சுமார் 500 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் வசந்தி மஞ்சநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் சரியாக வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சரியாக வரி செலுத்துபவர்களுக்கு வங்கிகளில் குறைந்த வட்டியுடன் கடன் வழங்குவதற்கும், சுங்கம் மற்றும் குடிவரவு திணைக்களத்தில் விசேட சலுகைகளை வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்