சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 2000 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைப்பு – அஜித் ரோஹன

சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 2000 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைப்பு – அஜித் ரோஹன

சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்றுவதற்கு 2000 இற்கு மேற்பட்ட ஊழியர்கள் இணைப்பு – அஜித் ரோஹன

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2014 | 9:43 am

சட்டவிரோத சுவரொட்டிகள் உள்ளிட்ட பிரசார பதாதைகளை அகற்றுவதற்கு  2010 ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கு தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஊடாக சட்டவிரோத பிரசார பதாதைகளை அகற்றும் நடவடிக்கைக்கு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

உலகிலுள்ள பல நாடுகளில் இவ்வாறு சட்டவிரோத பிரசாரங்களுக்காக நிதி ஒதுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் பணமே இதற்காக செலவிடப்படுவதாகவும் கூறினார்.

வாகனங்களுக்கான எரிபொருள், ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட விடயங்களுக்காக நிதி செலவிடப்படவுள்ளதுடன், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் சட்டவிரோத பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்கு 50 மில்லியன் ரூபா வரை செலவாகும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்த நடவடிக்கைகளில் தேர்தல் விடயங்களுக்கு பொறுப்பான, இரண்டாயிரத்து 200 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகளை ஈடுபடுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த ஊழியர்களுக்கான சம்பளத்தை தேர்தல்கள் செயலகம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டவிரோத பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கையை அடுத்த வாரமளவில் நிறைவுசெய்ய முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்