புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நகுலேஸ்வரன் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில்

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நகுலேஸ்வரன் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில்

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் நகுலேஸ்வரன் கொலை சம்பவம்; சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 6:40 pm

மன்னார் வெள்ளாங்குளம் ஈசன் குடியிருப்புப் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 90 நாட்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

07 சந்தேகநபர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கே நகுலேஸ்வரன், கடந்த மாதம் 12 ஆம் திகதி இனந்தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கிராம சேவகர் ஒருவர் உட்பட் 07 பேர் மன்னார் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், 90 நாட்கள் தடுப்புகாவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்