பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன் – மலாலா யூசுப் சாய்

பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன் – மலாலா யூசுப் சாய்

பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்பேன் – மலாலா யூசுப் சாய்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 12:54 pm

பாகிஸ்தானின் பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தாம் அதனை மகிழ்ச்சியாக ஏற்பதாக என சிறுமி மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தமது கல்வியை நிறைவு செய்ததன் பின்னர் அரசியல் வாழ்வில் தம்மை இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டிற்கு சேவை செய்வதே தமது எதிர்கால இலக்கு என்பதுடன் அனைத்து குழந்தைகளும் கல்வி கற்பதற்கான வசதிகளை தாம் ஏற்படுத்தி கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சிறுவர் உரிமை செயற்பாட்டாளரான மலாலா யூசுப் சாய் இன்று நோபல் பரிசை பெற்றுக்கொள்ளவுள்ளார்.

சமாதானத்திற்கான நோபல் பரிசான 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை மலாலா யூசுப் சாயும் கைலாஷ் சத்தியார்த்தியும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்