திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தனர்

திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தனர்

திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரதி அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தனர்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 1:45 pm

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க பிரதி அமைச்சராக செயற்பட்ட பி. திகாம்பரமும் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தினை பி.திகாம்பரம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தாவரவியல் பூங்கா மற்றும் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சர் வி.ராதாகிருஷ்ணன் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளதாக வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வீ இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராவார்.

இவர்கள் இருவரும் கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி பிரதியமைச்சர்களாக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்