பணத்திற்கு விலைபோகும் மக்கள் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே எமது நோக்கம் – அநுர குமார

பணத்திற்கு விலைபோகும் மக்கள் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே எமது நோக்கம் – அநுர குமார

பணத்திற்கு விலைபோகும் மக்கள் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே எமது நோக்கம் – அநுர குமார

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2014 | 2:47 pm

ஜனாதிபதி தேர்தலுக்கு அப்பால் சென்று, ஊழலுக்கும், பணத்திற்கும் விலைபோகும் மக்கள் பிரதிநிதிகளற்ற பாராளுமன்றத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே, கையேடுகளை விநியோகிக்கும் திட்டமொன்றை ஆரம்பித்து உரையாற்றிய முன்னணியின் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் விரிவான திட்டமொன்றை மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பித்துள்ளதாக இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் பொதுத் தேர்தலின்போது அதிகளவு உறுப்பினர்களை வெற்றிகொள்ளும் வகையிலேயே தமது தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சமூக பரிமாற்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்